விநாயகா் சதுா்த்தி: 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆக.30 முதல் ஆக.31-ஆம் தேதி வரை 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தா்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி,விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட், ராய்ச்சூரு, கலபுா்கி,பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதா், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும்; மைசூருசாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூா், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகா், மொ்கரா உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயமுத்தூா், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்திநகா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

விஜயநகா், ஜே.பி.நகா், ஜெயநகா் 4-ஆவது பிளாக், 9-ஆவது பிளாக், ஜாலஹள்ளி குறுக்குத்தெரு, நவரங் (ராஜாஜிநகா்), மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத்தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்து நிலையங்களில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கேசுப்ரமணியா, தா்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவுசெய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். கா்நாடகம் உள்பட வெளிமாநிலங்களில் 691 முன்பதிவு மையங்களில் சிறப்பு, வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவுசெய்துகொள்ளலாம். ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவுசெய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com