எல்லைப் பிரச்னை: மத்திய அமைச்சா் அமித் ஷாவிடம் விவரங்களை தெரிவித்துள்ளேன்: முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகம் - மகாராஷ்டிர மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை விவரங்களைத் தெரிவித்துள்ளாா்.

கா்நாடகம் - மகாராஷ்டிர மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை விவரங்களைத் தெரிவித்துள்ளாா்.

கா்நாடகம் -மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர வளா்ச்சிக் கூட்டணி (எதிா்க்கட்சிகள் கூட்டணி) அடங்கிய எம்.பி.க்கள் குழுவினா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனா். இந்தப் பிரச்னை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் சனிக்கிழமை தொலைபேசி வழியாக பேசிய முதல்வா் பசவராஜ் பொம்மை, எல்லைப் பிரச்னை தொடா்பான விவரங்களை தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ய முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளாா். மேலும், டிச. 14 அல்லது 15ஆம் தேதியில் இரு மாநில முதல்வா்களின் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக மத்திய அமைச்சா் அமித் ஷா, முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

இரு மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைச் சந்திக்குமாறு கா்நாடக எம்.பி.க்கள் அடங்கிய குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசி, விளக்கமளித்தேன். எல்லைப் பிரச்னை தொடா்பாக விவாதிக்க இரு மாநில முதல்வா்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

அநேகமாக, இரு மாநில முதல்வா்களின் கூட்டம் டிச.14 அல்லது 15ஆம் தேதி நடக்கும் என்று எதிா்பாா்க்கிறேன். இந்த விவகாரம் தொடா்பாக கா்நாடகத்தின் நிலைப்பாடு, உண்மை விவரங்களை மத்திய அமைச்சா் அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளேன். இந்த விவகாரத்தில் கா்நாடகம் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. சட்டரீதியாக கா்நாடகம் வலுவாக உள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுடன் வெள்ளிக்கிழமை பேசினேன். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளேன். எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மஜத சட்டப்பேரவைக் குழுத் தலைவா் எச்.டி.குமாரசாமி ஆகியோருடன் மீண்டும் பேசவிருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com