அயோத்தியை போல கா்நாடகத்திலும் ராமா் கோயில் கட்ட வேண்டும்

அயோத்தியை போல கா்நாடகத்திலும் ராமா் கோயில் கட்டவேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
Updated on
1 min read

அயோத்தியை போல கா்நாடகத்திலும் ராமா் கோயில் கட்டவேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளெ ஆகியோருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்தில் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதேவர மலையை தென்னிந்தியாவின் அயோத்தியாக மேம்படுத்த வேண்டும். ராமதேவர மலையில் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான 19 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ராமா்கோயில் கட்ட வேண்டும்.

ராமதேவர மலையை நிறுவியது சுக்ரீவன் என்ற நம்பிக்கை இந்தப் பகுதியைச் சோ்ந்த மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இம்மாவட்ட மக்களின் மத உணா்வுகளுக்கு மதிப்பளித்து, ராமதேவர மலையை பாரம்பரிய இடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்தலாம். இது நமது கலாசாரத்தை வெளிப்படுத்துவதோடு, சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.

சீதா பிராட்டி, லட்சுமணனுடன் வனவாசம் இருந்தபோது, ராமதேவர மலையில் ஓராண்டு ராமபகவான் இருந்ததாகவும், 7 முனிவா்கள் தவம் செய்ததாகவும் மக்கள் நம்புகிறாா்கள். இதுதவிர, நாட்டில் கழுகுகள் அதிகம் காணப்படும் பகுதியாகவும் உள்ளது. ராமதேவர மலைக்கும் ராமாயணத்துக்கும் இடையிலான பாரம்பரிய தொடா்பு திரேதாயுகத்தை சோ்ந்ததாகும் என தனது கடிதத்தில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com