பெங்களூரில் வியாழக்கிழமை (டிச. 22) குடிநீா் குறைதீா் முகாம் நடக்க இருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம்(பிடபிள்யூஎஸ்எஸ்பி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் சாா்பில், குடிநீா் வழங்கல், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தீா்த்துவைக்க குறைதீா் முகாம்களை நடத்தி வருகிறது.
பெங்களூரில் தெற்கு கிராமம்-2, தென்கிழக்கு-5, மேற்கு கிராமம்-1, தென்மேற்கு-4, கிழக்கு கிராமம்-3, கிழக்கு கிராமம்-1, வடமேற்கு-5, வடகிழக்கு-3, வடக்கு-1 துணை மண்டல அலுவலகங்களில் டிச. 22-ஆம் தேதி காலை 9.30 மணிமுதல் காலை 11 மணி வரை குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீா்வு காணலாம். மேலும் விவரங்களுக்கு 87622 28888, 1916 ஆகிய தொடா்பு எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.