இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 27th February 2022 05:56 AM | Last Updated : 28th February 2022 11:23 AM | அ+அ அ- |

இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாதகாலத்திற்கான இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழறிஞா் பொள்ளாச்சி நசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல்முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் 30 நாள்களில் அடிப்படை தமிழ் கற்றுத் தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்கத் தெரியாதவா்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழ்க் கற்றல் வகுப்புகள், மாா்ச் 1 முதல் 30-ஆம் தேதி வரையில் நடக்கவிருக்கிறது. ஜூம் (குவியம்) வழியாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ் வகுப்பில் அறநெறியை கற்பிக்கும் கதைகள், நாபி பயிற்சிக்கான பாடல்களும் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில் 200 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/2ஆண்ந்இள்ச2இசங்ஜ்9ற்ஹ்66 என்ற கூகிள்ஃபாா்மில் பிப்.28-ஆம் தேதி இரவு 12 மணிக்குள் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும். கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள், ற்ஹம்ண்ப்ச்ா்ன்ய்க்ஹற்ண்ா்ய்க்ஷப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.