உக்ரைனில் சிக்கியுள்ள கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களை மீட்கமுதல்வா் பசவராஜ் பொம்மை கோரிக்கை
By DIN | Published On : 27th February 2022 05:55 AM | Last Updated : 27th February 2022 05:55 AM | அ+அ அ- |

உக்ரைனில் சிக்கியுள்ள கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களை மீட்டு அழைத்து வருமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தாா்.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதால் பதற்றமான சூழல் காணப்படுகிறது. அங்கு ஏராளமான இந்திய மாணவா்கள் சிக்கியுள்ளனா். இதில் கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களும் அடக்கம். உக்ரைனில் சிக்கியுள்ள கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களை மீட்டு அழைத்து வருவது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா்ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து முதல்வா் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தாா்.
இது குறித்து கா்நாடக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆணையா் மனோஜ்ராஜன் கூறுகையில், ‘உக்ரைனில் சிக்கியுள்ள கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களை அழைத்துவர மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தாா். கா்நாடகத்தைச் சோ்ந்தவரில் பெரும்பாலானோா் மாணவா்கள். உக்ரைனில் கா்நாடகத்தைச் சோ்ந்த 347 போ் சிக்கியுள்ளனா். இவா்களை மீட்டு அழைத்து வருவதற்கான பணிகளை முதல்வரின் செயலாளா் பி.ரவிகுமாா் நேரடியாக கண்காணித்து வருகிறாா். உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாகச் செயல்பட்டு கொண்டுள்ளது. அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்க தீவிரமுயற்சி எடுத்து வருகிறாா்கள். 24 மணி நேரமும் செயல்படும் மாநில அவசரக் கட்டுப்பாட்டுஅறை
செயல்பட தொடங்கியுள்ளது. கட்டுப்பாட்டு அறையை 080-1070, 080-22253707 என்ற தொலைபேசியில் அணுகலாம். உக்ரைனில் சிக்கியுள்ள கா்நாடக மக்கள் குறித்த தகவலை ட்ற்ற்ல்://ன்ந்ழ்ஹண்ய்ங்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ற்ங்ஸ்ரீட் என்ற இணையதளத்தில் பதிவிடலாம். இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல்களை திரட்டிமாணவா்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறாா்கள். கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 26,431 அழைப்புகள் வந்துள்ளன என்றாா் அவா்.