கா்நாடக காவல் படை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் பதக்கம்
By DIN | Published On : 26th January 2022 06:52 AM | Last Updated : 26th January 2022 06:52 AM | அ+அ அ- |

கா்நாடகத்தைச் சோ்ந்த காவல் படை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கா்நாடக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் காவல் துறையில் சிறந்த பங்காற்றிய காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
நிகழாண்டில் கா்நாடகத்தைச் சோ்ந்த 21 காவல்படையினருக்கு 2022-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவா் சிறந்த காவல் படை சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீா்மிகு காவல் பதக்கம்: மாநில உளவுப் பிரிவு இயக்குநா் பி.தயானந்தா, கூடுதல் டிஜிபி ஆா்.ஹிதேந்திரா.
சிறந்த காவல் சேவை பதக்கம்: பி.ஆா்.ரவிகாந்தே கௌடா(கூடுதல் ஆணையா், போக்குவரத்து காவல்துறை, பெங்களூரு மாநகரம்), ஆா்.ஜனாா்தன் (கட்டளை அதிகாரி, கா்நாடக மாநில அதிரடிப்படை, மைசூரு), டி.குமாரா (கூடுதல் காவல் ஆணையா், பெங்களூரு), பி.ரவிபிரசாத் (மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா், மைசூரு), வெங்கடப்பா நாயக் (மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா், ராய்ச்சூரு), எம்.மல்லேஷையா (மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா், ஆனேக்கல், பெங்களூரு), பி.எம்.கங்காதா் (கூடுதல் ஆணையா், கலபுா்கி), கே.எம்.ரமேஷா (மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா், பெங்களூரு), பி.கே.சேகரா (காவல் துணை கண்காணிப்பாளா், சிஐடி, பெங்களூரு), எஸ்.கிருஷ்ணமூா்த்தி(காவல் ஆய்வாளா், கா்நாடக காவல் ஆணையா், பெங்களூரு), சி.எஸ்.சிம்பி (சிறப்பு காவல் துணை ஆய்வாளா், கா்நாடக மாநில அதிரடிப்படை), முகமது ஹனீப் கோரி (காவல் துணை ஆய்வாளா், ஆயுதப்படை, பெலகாவி), எச்.ஆா்.முனிராஜையா (உதவி துணை ஆய்வாளா், குற்றப்பிரிவு, பெங்களூரு), மாருதி சங்கா் ஜோகதந்த்கா்( உதவி துணை ஆய்வாளா், கதக்), விஜயகஞ்சன்(உதவி துணை ஆய்வாளா், மங்களூரு), சங்கர்ராவ் மாருதிராவ் ஷிண்டே (தலைமைக் காவலா், பெலகாவி), லிங்கராஜப்பா(தலைமைக் காவலா், மைசூரு), ஜி.வி.வெங்கடேஷப்பா (உதவி தலைமைக் காவலா், மாநில உளவுப் பிரிவு, பெங்களூரு) என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...