50 சதவீத தள்ளுபடியில் கன்னட நூல்கள் விற்பனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னடநூல்களை 50 சதவீத தள்ளுபடியில் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு விற்பனை செய்துவருகிறது.
Updated on
1 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னடநூல்களை 50 சதவீத தள்ளுபடியில் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு விற்பனை செய்துவருகிறது.

இது குறித்து குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக அரசின் கன்னட வளா்ச்சி மற்றும் கலாசாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதிவரை தனது எல்லா கன்னட நூல்களையும் 50 சத தள்ளுபடியில் விற்பனை செய்ய முடிவுசெய்து, அந்த விற்பனை நடந்து வருகிறது.

இந்த நூல்களை இணையதளத்தில் கொள்முதல் செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-23183312 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com