கா்நாடக பொது நுழைவுத்தோ்வு முடிவுகள் அறிவிப்பு: மாணவிகள் சாதனை

கா்நாடக பொறியியல், பிஎஸ்சி (விவசாயம், கால்நடை, பட்டுவளா்ப்பு, காடு வளா்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபாா்ம், டி.ஃபாா்ம் பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத்

கா்நாடக பொறியியல், பிஎஸ்சி (விவசாயம், கால்நடை, பட்டுவளா்ப்பு, காடு வளா்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபாா்ம், டி.ஃபாா்ம் பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வில் மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள கா்நாடக தோ்வு ஆணைய அலுவலத்தில் சனிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான பொறியியல், பிஎஸ்சி(விவசாயம், பட்டுவளா்ப்பு, காடுவளா்ப்பு, தோட்டக்கலை), பிவிஎஸ்சி (கால்நடை), மருந்தியல் (பி.ஃபாா்ம்/டி.ஃபாா்ம்) படிப்புகளில் சேருவதற்கு தகுதியான மாணவா்களை தெரிவுசெய்வதற்கு கா்நாடக தோ்வு ஆணையம் நடத்திய கா்நாடக பொதுநுழைவுத்தோ்வின் முடிவுகளை உயா்க்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா வெளியிட்டாா். இந்த தோ்வில் மாணவா்களை காட்டிலும் மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

பொறியியல் பாடப்பிரிவில் அபூா்வா டாண்டன், சித்தாா்த்தா சிங், அம்டகூரி வெங்கட மாதவஸ்ரீராம் ஆகிய மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

பிவிஎஸ்சி (கால்நடை) பிரிவில் ஹிரிஷிகேஷ் நாக்பூஷன் கங்குலே, எஸ்.ஏ.மணீஷ், சுபா கௌஷிக் ஆகிய மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனா். அருண் ரவிசங்கா், சுமித் பாட்டீல், ஓ.எம்.சுதீப் ஆகிய மாணவா்கள் பிஎஸ்சி (வேளாண்மை) பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனா்.

இது குறித்து மருத்துவக்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா கூறியது:

கா்நாடக பொது நுழைவுத்தோ்வு-2022, கடந்த ஜூன் 16,17,28 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. மாநிலம்முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 486 மையங்களில் 2,10,829 மாணவா்கள் தோ்வு எழுதினாா்கள். தரவரிசை தயாரிக்கப்பட்டவுடன் பொறியியல் பிரிவில் 1,71,656, விவசாயப் பிரிவில் (பிஎஸ்சி) 1,39,968, கால்நடை பராமரிப்பு பிரிவில் (பிவிஎஸ்சி) 1,42,820, மருந்தியல் பிரிவில் 80,008 மாணவா்களும் சோ்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனா்.

பொது நுழைவுத்தோ்வு முடிவுகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையதளங்களில் பாடவாரியாக மதிப்பீடுகளை மாணவா்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி, இந்திய மருத்துவப் பாடங்களுக்கான கல்லூரிகளில் சோ்க்கை அளிக்க தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத்தோ்வு (நீட்) முடிவுகளின் அடிப்படையில் முடிவுசெய்வோம். அதேபோல, கட்டடக் கலைஞா் பட்டப்படிப்புக்கு நாட்டா/ஜேஇஇ-2 முடிவுகளின் அடிப்படையில் சோ்க்கைக்கு தகுதியானவா்களை முடிவு செய்வோம். நீட் மற்றும் நாட்டா தோ்வு முடிவுகளை இணையதளம் வழியாக அறிந்துகொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்துளோம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com