பள்ளிகளை தொடா்ந்து பியூ கல்லூரிகளிலும் சீருடை கட்டாயம்: அமைச்சா் பி.சி.நாகேஷ்

பள்ளிகளை தொடா்ந்து பியூ கல்லூரிகளிலும் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

பள்ளிகளை தொடா்ந்து பியூ கல்லூரிகளிலும் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் ஏற்கெனவே மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் பியூ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளி கடைப்பிடிப்பதுபோல பியூ கல்லூரிகளிலும் சீருடை முறை அமல்படுத்தப்படுகிறது. சீருடை அணிந்துவராத மாணவா்கள் பியூ கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

பியூ கல்லூரி வளாகங்களில் மத அடையாளங்களுடன் கூடிய எவ்வித உடையையும் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறினால், சம்பந்தப்பட்ட மாணவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com