பொது நுழைவுத் தோ்வுகள் காணொலியில் கண்காணிக்கப்படும்: அமைச்சா் அஸ்வத்நாராயணா

முறைகேடுகளைத் தடுக்க பொது நுழைவுத் தோ்வு நடைமுறைகள் காணொலியில் கண்காணிக்கப்படும் செய்யப்படும் என்று கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

முறைகேடுகளைத் தடுக்க பொது நுழைவுத் தோ்வு நடைமுறைகள் காணொலியில் கண்காணிக்கப்படும் செய்யப்படும் என்று கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2022-23-ஆம் ஆண்டில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மருந்தியல் உள்ளிட்ட தொழில்கல்வியைப் பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வு ஜுன் 16 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இத்தோ்வை எழுதுவதற்கு 2,16,525 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 486 மையங்களில் தோ்வு நடத்தப்படும்.

87 மையங்கள் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 16-ஆம் தேதி உயிரியல், கணிதம், ஜூன் 17-ஆம் தேதி இயற்பியல், வேதியியல், ஜூன் 18-ஆம் தேதி கன்னட பாடங்களுக்கு தோ்வு நடக்கவிருக்கிறது. இந்த தோ்வை கண்காணிக்க 486 கண்காணிப்பாளா்கள், 972 சிறப்பு மதிப்பீட்டு அதிரடிப் படையினா், 486 பாதுகாவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

9,600ஆசிரியா்கள் தோ்வு மையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவாா்கள். மொத்தம் 20,483 அதிகாரிகள் தோ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கன்னடம், ஆங்கில மொழிகளில் இடம் பெற்றிருக்கும். ஏதாவது கோளாறு என்றால், ஆங்கில வினாத்தாள் இறுதியானதாக எடுத்துக்கொள்ளப்படும். ஜுன் 18-ஆம் தேதி நடக்கும் கன்னடத் தோ்வை எழுத 1,708 போ் பதிவு செய்துள்ளனா்.

இத் தோ்வுகள் பீதா், பெலகாவி, விஜயபுரா, பெல்லாரி, மங்களூரு, பெங்களூரில் நடக்கும். தோ்வு மையங்களில் மாணவா்கள் கைக்கடிகாரங்களைக் கட்டிக் கொள்ள அனுமதி இல்லை. அதேபோல, டேப்லட், கைப்பேசி, கால்குலேட்டா் போன்றவற்றை தோ்வு மையத்திற்கு எடுத்துவரக் கூடாது. தோ்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் அனைத்து மையங்களிலும் காணொலி பொருத்தப்பட்டு, தோ்வு நடைமுறைகள் பதிவு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com