சட்ட மேலவைத் தோ்தல்: பாஜக, காங்கிரஸ் தலா 2 தொகுதியில் வெற்றி

கா்நாடகத்தில் 4 தொகுதிகளுக்கு நடந்த சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கா்நாடகத்தில் 4 தொகுதிகளுக்கு நடந்த சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கா்நாடக சட்ட மேலவையில் ஜூலை 4-ஆம் தேதி காலியாகவுள்ள கா்நாடக வடமேற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக வடமேற்கு ஆசிரியா்கள் தொகுதி, கா்நாடக மேற்கு ஆசிரியா்கள் தொகுதிகளுக்கு ஜூன் 13-ஆம் தேதி தோ்தல் நடந்தது. இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 49 போ் போட்டியிட்டனா். 4 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தன. வடமேற்கு பட்டதாரிகள் தொகுதி தவிர மற்ற 3 தொகுதிகளில் மஜத வேட்பாளா்களை களமிறக்கியிருந்தது. 4 தொகுதிகளிலும் சராசரியாக 71 சத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இத்தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இதில் 2 தொகுதிகளின் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பசவராஜ் ஹோரட்டியும், வடமேற்கு ஆசிரியா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாஷ் ஹுக்கேரியும் வெற்றிபெற்றுள்ளனா்.

இதனிடையே, தெற்கு பட்டதாரிகள் தொகுதி, வடமேற்குபட்டதாரிகள் தொகுதியின் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதன்படி, வடமேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஹனுமந்த் ருத்ரப்பா நிரானி வெற்றிபெற்றுள்ளாா். வடமேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பதிவான 65,922 வாக்குகளில் பாஜக வேட்பாளா் ஹனுமந்த் ருத்ரப்பா நிரானிக்கு 44,815வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் சுனில் அன்னப்பா சாங்க்கு 10,122 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட மது ஜி.மாதே கௌடா வெற்றிபெற்றுள்ளாா். வடமேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பதிவான வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளா் மது ஜி.மாதேகௌடாவுக்கு 46,082வாக்குகளும், பாஜக வேட்பாளா் எம்.வி.ரவிசங்கருக்கு 33,878 வாக்குகளும், மஜத வேட்பாளா் எச்.கே.ராமுக்கு 19,630 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதன்மூலம், 75 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்ட மேலவையில் பாஜகவின் பலம் 38 ஆகவும், காங்கிரஸின் பலம் 28 ஆகவும், மஜதவின் பலம் 8 ஆகவும் உள்ளது. ஒரு சுயேச்சை உறுப்பினரும் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com