டி-20 கிரிக்கெட் போட்டி: நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரில் நடக்கவிருக்கும் டி-20 கிரிக்கெட் போட்டியின்போது மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு 1.30 மணி வரை நீட்டிக்க பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் நடக்கவிருக்கும் டி-20 கிரிக்கெட் போட்டியின்போது மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு 1.30 மணி வரை நீட்டிக்க பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் ஜூன் 19-ஆம் தேதி டி-20 கிரிக்கெட் போட்டி இந்திய-தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கின்றன. இந்தப் போட்டிகளின்போது மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பையப்பனஹள்ளி, கெங்கேரி, நாகசந்திரா, பட்டு வாரியம் மெட்ரோ ரயில் முனையங்களில் இருந்து நள்ளிரவு (ஜூன் 20) 1 மணிக்கு கடைசி மெட்ரோ ரயில் புறப்படும். அதேபோல, கெம்பே கௌடா (மெஜஸ்டிக்) மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து முனையங்களுக்கும் இரவு 1.30 மணிக்கு கடைசி மெட்ரோ ரயில் புறப்படும். இந்த சிறப்பு சேவைகளுக்காக ஜூன் 19-ஆம் தேதி மாலை 3 மணி முதல் ரூ.50 விலையில் பயணச்சீட்டுகள் விற்கப்படும். இந்த பயணச்சீட்டு ஜூன் 20-ஆம் தேதி அதிகாலை 1.30 மணி வரை மட்டும் செல்லுபடியாகும். எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் கப்பன்பூங்கா ரயில்நிலையத்திற்கு வழக்கமான பயண அட்டையை பயன்படுத்தி பயணிக்கலாம். ஆனால், கப்பன்பூங்கா மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து வேறு எங்கு சென்றாலும் சிறப்பு பயணச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com