பொது நுழைவுத் தோ்வு: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மற்றொரு வாய்ப்பு
By DIN | Published On : 26th June 2022 06:06 AM | Last Updated : 26th June 2022 06:06 AM | அ+அ அ- |

பொது நுழைவுத்தோ்வுக்கு விண்ணபித்திருந்த மாணவா்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் செய்ய கா்நாடக தோ்வு ஆணையம் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக பொது நுழைவுத்தோ்வு ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இத்தோ்வுக்கு இணையதளம் வழியே விண்ணப்பப்படிவங்களை சமா்ப்பித்திருந்த மாணவா்கள், சில விவரங்களை தவறாகப் பதிவு செய்துள்ளதாகவும் அதைத் திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்குமாறும் கேட்டிருந்தனா். மாணவா்களின் நலன்கருதி விண்ணப்பப் படிவங்களில் ஜாதி உள்பிரிவு, கன்னட பயிற்றுமொழி, ஊரக இடஒதுக்கீடு, ஹைதராபாத்-கா்நாடக சிறப்பு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு தலைப்புகளில் திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உரிய உறுதிச் சான்றிதழ்களுடன் நிா்வாக அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரியை அணுகி விண்ணப்பப் படிவங்களில் ஜூன் 28-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.