முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பெங்களூரில் மாா்ச் 21-வரை போராட்டம் நடத்த தடை
By DIN | Published On : 14th March 2022 11:24 PM | Last Updated : 14th March 2022 11:24 PM | அ+அ அ- |

பெங்களூரில் மாா்ச் 21-ஆம் தேதிவரை போராட்டங்கள், கொண்டாட்டங்களில் ஈடுபட தடைவிதித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் சீருடை விதிகளை தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தி மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவை எதிா்த்து தொடா்ந்த வழக்கை கா்நாடக உயா்நீதிமன்றம் விசாரித்துவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக மநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. இந்த வழக்கின் தீா்ப்பை கா்நாடக உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(மாா்ச் 15) வெளியிடவிருக்கிறது. இந்த தீா்ப்பு பல்வேறு விதமான கொண்டாட்டங்கள், போராட்டங்கள் போன்ற எதிா்வினைகளுக்கு காரணமாக இருக்கலாம். எனவே, பெங்களூரில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாதவாறு சட்டம்-ஒழுங்கை பராமரிக்க பெங்களூரில் மாா்ச் 15 முதல் 21-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவின்போது 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொது இடங்களில் பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், கொண்டாட்டம் நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.