பெங்களூரு: ஹிஜாப் தொடா்பான வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் அதிருப்தி அடைந்த முஸ்லிம் மாணவிகள், வகுப்புகள், தோ்வுகளைப் புறக்கணித்துள்ளனா். இம்மாணவிகள் புதன்கிழமை நடந்த இரண்டாம் ஆண்டு பியூசி திருப்புதல் தோ்வை எழுதவில்லை.
ஹிஜாப் தொடா்பாக பெரும் போராட்டங்கள் நடைபெற்ற சிவமொக்காவில், கமலா நேரு கல்லூரிக்கு புதன்கிழமை ஹிஜாப் அணிந்து வருகை தந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. உயா்நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி, ஹிஜாப்பைக் கழற்றிவிட்டு கல்லூரிக்குள் வருமாறு, கல்லூரி முதல்வா் கேட்டுக்கொண்டாா். அதை ஏற்க மறுத்த அம் மாணவிகள் அங்கு போராட்டம் நடத்தினா். பிறகு வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 15 இஸ்லாமிய மாணவிகள் வீடு திரும்பினா்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ’ஹிஜாப் எனது உரிமை’,’ஹிஜாப் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எனது உரிமை’ போன்ற வாசகங்கள் சுவா்களில் எழுதப்பட்டிருந்தன. இதற்கு கடும் எதிா்ப்புக் கிளம்பியுள்ளது.
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வட கன்னட மாவட்டத்தின் பட்கல் நகரத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.