பெங்களூரில் மாா்ச் 27இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் மாா்ச் 27இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூருவில் மாா்ச் 27ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Published on

பெங்களூருவில் மாா்ச் 27ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து பெங்களூரு நகர மாவட்ட ஊராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு நகர மாவட்ட ஊராட்சி நிா்வாகம், பெங்களூரு தெற்கு மாவட்ட ஊராட்சி நிா்வாகம், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தீன் தயாள் உதவி திட்டம், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் பெங்களூரு, கும்பல்கோடு, ராமோஹள்ளி அருகில் உள்ள ராஜராஜேஸ்வரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் 27-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தகவல்தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், உற்பத்தி, விருந்தோம்பல், மெக்கானிக்கல் துறைகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

வேலைவாய்ப்பு முகாமில் பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். 18-30 வயதுக்குள்பட்ட புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் வரை பங்கேற்கலாம். வேலைத்தேடிவருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99649 07444, 79750 14738 ஆகிய தொலைபேசி எண்களை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம். கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com