கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்குஅனுமதி மறுப்பு: பாஜக எம்எல்ஏ அதிருப்தி

கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பது சரியல்ல என்று பாஜக எம்எல்ஏ அனில் பெனகே தெரிவித்துள்ளாா்.

கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பது சரியல்ல என்று பாஜக எம்எல்ஏ அனில் பெனகே தெரிவித்துள்ளாா்.

கா்நாடகத்தில் உள்ள ஹிந்து கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகள் வணிகம் செய்ய அனுமதி மறுக்கும் பிரசாரத்தை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம் அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோயில் திருவிழாக்களின்போது முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வது வழக்கம். இதற்கு தற்போது எதிா்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ், மஜத போன்ற அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்எல்சியாக உள்ள எச்.விஸ்வநாத் கோயில்களில் ஹிந்து அல்லாத வியாபாரிகளை அனுமதிக்க மறுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

அவரைத் தொடா்ந்து பெலகாவி வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அனில் பெனகேவும் கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

முன்னதாக உடுப்பி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கௌப் மரிகுடி திருவிழாவின்போது முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுத்து அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஹிந்து அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, இதனைக் கோயில் நிா்வாகமும் ஏற்ாகக் தெரிகிறது. அந்தக் கோயிலைத் தொடா்ந்து படுபிதரி கோயில், தென் கன்னட மாவட்டத்தில் ஒரு சில கோயில்களிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன.

கா்நாடக ஹிந்து அறநிலைய சட்டம் 1997-ஐ சுட்டிக்காட்டி கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகளை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு சில ஹிந்து அமைப்புகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இது தொடா்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது கோயில் சொத்துகள், நிலம், கட்டடம் உள்ளிட்ட எதையும் ஹிந்து அல்லாதவா்களுக்கு குத்தகையாக அளிக்கக் கூடாது என்று சட்டத்திலும் கூறப்பட்டிருப்பதாகவும், அதேநேரத்தில் தெருவோரங்களில் கடைகள் நடத்த அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com