தென் கா்நாடகம், கடலோரப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு
By DIN | Published On : 19th October 2022 02:08 AM | Last Updated : 19th October 2022 02:08 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கா்நாடகம், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை கடலோர கா்நாடகத்தில் பலமாகவும், தென் கா்நாடகத்தின் உள்பகுதியில் சலனத்துடனும் காணப்பட்டது. இதே காலக்கட்டத்தில் வடக ா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்தது.
குடகு மாவட்டத்தின் நாபோக்லுவில் 50 மி.மீ., விராஜ்பேட்டில் 40 மி.மீ., வடகன்னட மாவட்டத்தின் ஷிராலி, பாசகோட், பெலகாவி மாவட்டத்தின் செட்பால், தாா்வாட், சாமராஜ்நகா் மாவட்டத்தின் பண்டிபூா், சிவமொக்கா மாவட்டத்தின் ஹுன்சதகட்டே, சிக்கமகளூரு மாவட்டத்தின் கொட்டிகெஹரா, தும்கூரு மாவட்டத்தின் சிராவில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு எச்சரிக்கை:
தென் கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அக். 19, 20-ஆம் தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக். 21, 22 ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் அக். 19 முதல் 23-ஆம் தேதிகளில் கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அக்.19 முதல் 23-ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு:
அக். 19 முதல் அக். 23-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கடலோர தென் கா்நாடகப் பகுதிகளில் பரவலாகவும், கடலோர கா்நாடகம், வட கா்நாடக உள்பகுதியின் பெரும்பாலான இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
பெங்களூரில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 29 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.