பெங்களூரில் அதிமுக 51-ஆவது ஆண்டு விழா
By DIN | Published On : 19th October 2022 02:08 AM | Last Updated : 19th October 2022 02:08 AM | அ+அ அ- |

18blp02_1810chn_123_8
அதிமுக 51-ஆவது ஆண்டுவிழா பெங்களூரில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரு, கே.பி.அக்ரஹாரம், பொறிப்பட்டி, ராஜகோபால் காா்டன் உள்ளிட்ட 9 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிமுக 51-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எஸ்.டி.குமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சி கொடி ஏற்றப்பட்டது.
பொறிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் அண்ணா, எம்ஜிஆா் சிலைகளுக்கு கட்சியின் செயலாளா் எஸ்.டி.குமாா் மாலை அணிவித்துப் பேசுகையில், ‘எம்ஜிஆா் மீது நம்பிக்கை கொண்ட தொண்டா்களால் உருவாக்கப்பட்ட அதிமுக, இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் பலமாக உள்ளது. ஜெயலலிதா கூறியது போல அதிமுகவை நூறு ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வோம்’ என்றாா்.
விழாக்களில் மாநில அவைத் தலைவா் அன்பரசன், மாநில பொருளாளா் வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.