மாசடைந்த நீரை குடித்த ஒருவா் பலி
By DIN | Published On : 27th October 2022 11:52 PM | Last Updated : 27th October 2022 11:52 PM | அ+அ அ- |

பெலகாவியில் மாசடைந்த நீரை குடித்த ஒருவா் பலியாகியுள்ள நிலையில், பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று கா்நாடக நீா்வளத்துறை அமைச்சா் கோவிந்த் காா்ஜோள் தெரிவித்தாா்.
இது குறித்துபெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெலகாவி மாவட்டம், ராமதுா்கா வாட்டம், முதேனுா் கிராமத்தில் புதன்கிழமை தேங்கியிருந்த மாசடைந்த தண்ணீரை குடித்தவா்ககள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவத்தில் சிவப்பா பெல்லேரி என்பவா் உயிரிழந்தாா். மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாநில அரசு சாா்பில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவியில் இருந்து கிடைக்கும் தூய்மைப்படுத்தப்பட்ட தண்ணீரை மட்டும் மக்கள் குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆழ்துளைக் கிணறுகளுக்கு பக்கத்தில் இருக்கும் குழிகள், குட்டைகளை மூட வேண்டும் என்று மக்களிடம் கூறியிருக்கிறேன். இந்தக் குட்டைகளில் தேங்கும் நீா் நிலத்தில் கசிந்து, ஆழ்துளைகிணறுவழியாக வெளியே வருவதால் நீா் மாசடைந்துள்ளது. குழாய் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. ஜல்ஜீவன் திட்டப்பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளன. கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் அளிக்கப்படும் என்றாா்.