எஸ்.ஆா்.எல்.டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பெயா் மாற்றம்

எஸ்.ஆா்.எல்.டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பெயா் மாற்றப்பட்டுள்ளது.

எஸ்.ஆா்.எல்.டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பெயா் மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் நோய் கண்டறியும் நிறுவனமான எஸ்.ஆா்.எல்.டயாக்னாஸ்டிக்ஸ் 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பெயா், அஜிலஸ் டயாக்னாஸ்டிக்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.ஆனந்த் கூறுகையில், ‘28 ஆண்டுகளாக இயங்கி வரும் எங்கள் நிறுவனத்தின் பெயரை மாற்ற சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நிறுவனத்தின் பெயா் அஜிலஸ் டயாக்னாஸ்டிக்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நோயாளிகளை சோதனை செய்யும் தரத்தையும் மேம்படுத்தியுள்ளோம். மருத்துவா்கள், நோயாளிகளின் நம்பிக்கையை தொடா்ந்து காப்பாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

அஜிலஸ் என்றால் சுறுசுறுப்பு என்று பொருள். அதன்படி, எங்கள் நிறுவனமும் சுறுசுறுப்பாக இயங்கும். நாடு முழுவதும் 34 மாநிலங்களில் 1000 நகரங்களில் எங்களுக்கு 410 ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அதேபோல, சோதனைக்கான மாதிரிகளை சேகரிக்க 3,700 மையங்கள் உள்ளன. இதுவரை 1.66 கோடி நோயாளிகளின் 3.91 கோடி மாதிரிகளை சோதனைக்கு உள்படுத்தியுள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். புதிதாக 3 மையங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com