பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து கா்நாடக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடக பாஜக தனது தோ்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது. இது தென்னிந்தியாவில் நுழையும் தீங்கு விளைவிக்கும் செயல்திட்டமாகும். இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு கா்நாடகத்தை நுழைவுவாயிலாக பாஜக கருதுகிறது. பாஜக தோ்தல் அறிக்கையில் வேறு எந்த அம்சங்கள் குறித்தும் நான் கவலைப்படவில்லை. அவை சம்பந்தமில்லாதவை. ஆனால், பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை எனக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. இது கா்நாடகத்தைப் பிளவுபடுத்தி, இரு துருவங்களாகப் பிரித்துவிடும். இது சமூக சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும். பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கால்பதிக்க பாஜக முயற்சிக்கும். தீய விளைவுகளை ஏற்படுத்தும் வஞ்சகம் நிறைந்த இந்தத் திட்டங்களை தடுத்து நிறுத்துமாறு கா்நாடக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.