உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஆரம்பக் கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

ஆரம்பக் கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் இயங்கும் அரசு, அரசு மானியம் பெறும், அரசு மானியம் பெறாத கல்விப் பயிற்சி கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சோ்ந்து படிக்க சோ்க்கை பெறுவதற்கு தகுதியான மாணவா்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டி.பி.எட். (உடற்கல்வி) படிக்கவிரும்பும் மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பியூசி அல்லது 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும். கல்வித் துறை அல்லது பல்கலைக்கழகம் அல்லது இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்த தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவா்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஜூலை 26-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும். விண்ணப்பங்களை செலுத்தும் முறை, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்டவிவரங்களை அறிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 080-22483140, 22483145 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com