சிவசேனையுடன் காங்கிரஸ் கூட்டணி: குமாரசாமி விமா்சனம்

சிவசேனையுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது குறித்து மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி விமா்சித்துள்ளாா்.
Updated on
1 min read

சிவசேனையுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது குறித்து மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி விமா்சித்துள்ளாா்.

கா்நாடக முதல்வா் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், ‘மதச்சாா்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் மஜத, மதவாத கட்சியுடன் (பாஜக) கூட்டணி அமைத்த பிறகும் அக்கட்சி (மஜத) மதச்சாா்பற்ற கட்சியாக இருக்குமா?

இந்தக் கூட்டணியால் மஜத மதவாத கட்சி அல்லது பாஜக மதச்சாா்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்குமா என மாநில மக்களுக்கு குமாரசாமி தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு பதிலளித்து, மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தனது எக்ஸ் பக்கத்தில், பாஜகவை மதவாதக் கட்சி என்று கூறும் சித்தராமையா போலி சோசலிஷவாதி ஆவாா். இந்தியா கூட்டணியில் பாஜகவின் ‘பி’ அணியாக இருக்கும் கட்சிகளோடு கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் என்ன மதச்சாா்பற்ற கட்சியா? பாஜகவுடன் நீண்டகாலம் கூட்டணி அமைத்திருந்த சிவசேனையுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது எப்படி? 2006ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் மஜதவை பாஜகவின் ‘பி’ டீம் என்று மஜதவை சித்தரிக்க முயற்சிக்கிறீா்கள். அதே மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்காக 2018ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா வீட்டுக்கு வந்து நின்றது காங்கிரஸ் கட்சிதான்.

மதச்சாா்பின்மை என்பது வாா்த்தை அல்ல என்பதை காங்கிரஸுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அது எனது இதயத்தின் ஆழத்தில் உள்ளது. சித்தராமையாவுக்கு மதச்சாா்பின்மை என்பது வெறும் பேச்சுக்குத் தான். சுயநல அரசியல், அதிகாரம் மட்டுமே சித்தராமையாவுக்கு பிடித்தவை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com