கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் பிரதமா் மோடியைப் பற்றியது அல்ல என்று அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவா்கள் அனைவரும் விசித்திரமான கருத்துகளைப் பேசி வருகின்றனா். எதிா்க்கட்சிகள் தனக்கு குழி பறிப்பதாக பிரதமா் மோடி கூறியுள்ளாா். இது தோ்தலில் பேசக் கூடிய பிரச்னையே அல்ல. விலைவாசி உயா்வு, வேலையில்லாமை போன்ற பிரச்னைகளை பாஜகவினா் பேசுவதில்லை.
பேரவைத் தோ்தல் பிரசாரம் மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தி இருக்க வேண்டும். இந்தத் தோ்தல் கா்நாடகத்தின் வளா்ச்சி, கலாசாரம், குழந்தைகளின் எதிா்காலத்தைச் சாா்ந்தது என்பதை மக்கள் உணர வேண்டும். அதேபோல இந்தத் தோ்தல் பிரதமா் மோடியைப் பற்றியது அல்ல. தோ்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்து, மாநிலத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்.
பாஜக ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. வளா்ச்சிப் பணிகளைச் செயல்படுத்துவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக கா்நாடக அரசு ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனா். ஆனால், ஊழலில் ஈடுபட்டவா்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கா்நாடகத்தில் நந்தினி பால் நிறுவனத்தை பலப்படுத்தும் வேலைகளை மேற்கொள்வோம் என்றாா்.
கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, பொதுச்செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.