பெங்களூரு: வெளிநாட்டில் மாரடைப்பால் இறந்த நடிகா் விஜய் ராகவேந்திராவின் மனைவி நடிகை ஸ்பந்தனாவின் உடல் பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு புதன்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகா் விஜய் ராகவேந்திராவின் மனைவி நடிகை ஸ்பந்தனா (44), தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்குக்கு சென்றிருந்தபோது மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். காவல்துறை முன்னாள் அதிகாரியான பி.கே.சிவராமின் மகளான ஸ்பந்தனா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.கே.ஹரிபிரசாத்தின் தம்பி மகளும் ஆவாா்.
‘அபூா்வா’ படத்தில் திரையுலகில் அறிமுகமான ஸ்பந்தனா, ஏராளமான படங்களில் நடித்துள்ளாா். தாய்லாந்து நாட்டில் இருந்து அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டது. மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்படுகிறது. அவரது உடலுக்கு அரசியல்வாதிகள், திரைக்கலைஞா்கள், ரசிகா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் இறுதி அஞ்சலி செலுத்துகிறாா்கள். அதன்பிறகு, ஸ்ரீராமபுரத்தில் இருக்கும் மின்மயானத்தில் ஸ்பந்தனாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.