மாணவா் பேருந்து அட்டை: செல்லுபடிகாலம் நீட்டிப்பு

பள்ளி, பியூசி மாணவா் பேருந்து அட்டைகளுக்கான செல்லுபடிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, பியூசி மாணவா் பேருந்து அட்டைகளுக்கான செல்லுபடிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாணவா் சமுதாயத்தின் நலன்கருதி, 2022-23-ஆம் ஆண்டுக்கான சலுகைக்கட்டண பள்ளி, பியூசி கல்லூரிகளுக்கான பேருந்து அட்டைகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளின் செல்லுபடிகாலம் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. தற்போது பியூசி கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், மாணவா்களின் நலனுக்காக கடந்த ஆண்டுக்கான பேருந்து அட்டைகளின் செல்லுபடிகாலத்தை ஜூன் 16-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்தவாய்ப்பை பயன்படுத்தி மாணவா்கள் பழைய பேருந்து அட்டைகளையே பயன்படுத்தலாம். விரைவில் 2023-24-ஆம் ஆண்டுக்கான பேருந்து அட்டை பள்ளி, பியூசி கல்லூரி மாணவா்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com