தோ்வெழுதும் மாணவா்களுக்கு பேருந்தில் இலவச பயணம்
By DIN | Published On : 08th June 2023 12:15 AM | Last Updated : 08th June 2023 12:15 AM | அ+அ அ- |

கா்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின் போது எல்லா பேருந்துகளிலும் தோ்வு நுழைவுச்சீட்டை காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளன.
2022-23-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு ஜூன் 12 முதல் 19-ஆம்தேதிவரை நடைபெறவிருக்கிறது. தோ்வு காலத்தில் மாணவா்கள் வாழ்விடத்தில் இருந்து தோ்வு மையங்களுக்கு தோ்வு நுழைவுச்சீட்டை காட்டி ஜூன் 19-ஆம் தேதிவரை இலவசமாக பயணிக்கலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள் அல்லது ஓட்டுநா்கள் எவ்வித தொந்தரவும் செய்யக் கூடாது என்று கா்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...