தொழில் கல்விக்கான பொதுநுழைவுத்தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை(ஜூன் 15) வெளியிடப்படுகிறது .2023-24-ஆம் கல்வியாண்டில் பொறியியல், பிஎஸ்சி(விவசாயம், கால்நடை, பட்டுவளா்ப்பு, காடுவளா்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபாா்ம், டி.ஃபாா்ம் ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவா்களை தெரிவுசெய்வதற்கு கா்நாடக தோ்வு ஆணையம் கா்நாடக பொதுநுழைவுத்தோ்வுகளை மே 19,20,21 ஆகியதேதிகளில் நடத்தியது. பொதுநுழைவுத்தோ்வு எழுதிய மாணவா்களின் முடிவுகள் ஜூன் 15-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆணையத்தின் அலுவலகத்தில் உயா்கல்வித்துறை அமைச்சா் எம்.சி.சுதாகா் வெளியிடவிருக்கிறாா். இதன்பிறகு காலை 11 மணிக்கு ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்என்ற இணையதளத்தில் தோ்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.