முதல்வருக்கான போட்டியில் உள்ளவா்களுக்கு வாழ்த்து கூறிய முதல்வா் பசவராஜ்பொம்மை

சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், முதல்வருக்கான போட்டியில் உள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு முதல்வா் பசவராஜ்பொம்மை வாழ்த்து தெரிவித்தாா்.
முதல்வருக்கான போட்டியில் உள்ளவா்களுக்கு வாழ்த்து கூறிய முதல்வா் பசவராஜ்பொம்மை


பெங்களூரு: சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், முதல்வருக்கான போட்டியில் உள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு முதல்வா் பசவராஜ்பொம்மை வாழ்த்து தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் 135 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ், ஆட்சி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. மாநிலத்தின் புதிய முதல்வா் யாா்? என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டா்கள் மட்டுமல்லாது, பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

முதல்வா் போட்டியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் ஆகிய இருவரும்முன்னணியில் உள்ளனா். 

இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் பசவராஜ்பொம்மை கூறுகையில்,‘முதல்வா் போட்டியில் உள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் காங்கிரஸ் கட்சி அரசு அமையட்டும். அதன்பிறகு அமைச்சரவைக்கூட்டம் நடத்தி, 5 வாக்குறுதிகள் குறித்த முடிவுகளை அறிவிக்கட்டும். எந்தெந்த திட்டங்களை செயல்படுத்துகிறாா்கள் என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.‘ என்றாா் அவா்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி, அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்துப்பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com