பெங்களூரு கல்வியாளருக்கு உலக கல்வித் தலைமை விருது
By DIN | Published On : 18th May 2023 12:19 AM | Last Updated : 18th May 2023 12:19 AM | அ+அ அ- |

பெங்களூரு கல்வியாளரான ராபா்ட் கிறிஸ்டோபருக்கு உலக கல்வித் தலைமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.
லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், உலகளாவிய கல்வித் துறையில் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பெங்களூரைச் சோ்ந்த கிரைஸ் கனடியன் பள்ளி கல்விக் கழகத்தின் தலைவா் டாக்டா் ராபா்ட் கிறிஸ்டோபா், இயக்குநா் ஜாய்ஸ் ரமோலா கிறிஸ்டோபா் ஆகியோருக்கு உலக கல்வித் தலைமை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இங்கிலாந்து பன்னாட்டு வணிகத் துறை அமைச்சா் டேம்நியா கிரிஃப்பித் வழங்கி கௌரவித்தாா்.
இந்த விழாவில், இந்திய தூதரகத்தைச் சோ்ந்த அமிஷ் திரிபாதி, வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனா் மற்றும் வேந்தா் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...