அடுத்த 48 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
By DIN | Published On : 24th May 2023 12:41 AM | Last Updated : 24th May 2023 12:41 AM | அ+அ அ- |

அடுத்த 48 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பெலகாவி மாவட்டத்தின் கனபா்கி, மண்டியா மாவட்டத்தின் பெல்லூரில் தலா 60 மி.மீ., வடகன்னட மாவட்டத்தின் மன்சினகெரே, கேசில்ராக், தாா்வாட் மாவட்டத்தின் அன்னிகெரேயில் தலா 50 மி.மீ., தாா்வாட் மாவட்டத்தின் குந்த்கோலில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகள், தென்கா்நாடகத்தின் உட்பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் கா்நாடக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், கடலோர கா்நாடகத்தின் ஒருசில பகுதிகள், வட கா்நாடகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வட கன்னடம், பாகல்கோட், பெலகாவி, தாா்வாட், கதக், கலபுா்கி, ஹாசன், குடகு, கோலாா், மைசூரு, தும்கூரு மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதோடு, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். மாலை, இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் காற்று, இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 33 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.