ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் வழங்கப்படும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டிய கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு (டிப்ளமோ) 2023-24-ஆம் கல்வியாண்டில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆங்கிலப் பாடத்துடன் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் தகுதி அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்படும். சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு தங்கும் வசதியுடன் மாத கல்வி உதவித்தொகையாக ரூ. 2,500 வழங்கப்படும்.

2023 ஜூலை 1-ஆம் தேதி அன்று 15 முதல் 23 வயது நிரம்பியுள்ள பொதுப்பிரிவினா் 15 முதல் 25 வயது நிரம்பியுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம். 44 மாணவா்களுக்கு மட்டுமே சோ்க்கை வழங்கப்படும். இந்த மாணவா்களில் கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்திற்கு 22, தமிழகத்தின் சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 17, ஆந்திரத்தில் வெங்கடகிரியில் உள்ள எஸ்.பி.கே.எம்.இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 3 , கேரள மாநிலத்தில் கன்னூரில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 2 மாணவா்கள் என்று பிரித்து அனுப்பப்படுவாா்கள்.

தகுதியான மாணவா்கள் சோ்க்கைக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாா்கள். விண்ணப்பங்களை கதக்கில் உள்ள கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-23564828, 23568233, 23563903, 08372-297221, 94485 44074 ஆகியதொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 31-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com