அரசு தொழில் மையத்தில் தொழில்சாா்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 26th May 2023 05:57 AM | Last Updated : 26th May 2023 05:57 AM | அ+அ அ- |

அரசு கருவி அறை மற்றும் பயிற்சிமையத்தில் (ஜிடிடிசி) அளிக்கப்படும் தொழில்சாா் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ராஜாஜிநகரில் தொழில்பேட்டையில் உள்ள அரசு கருவி அறை மற்றும் பயிற்சிமையத்தில் 2023-24-ஆம் கல்வியாண்டில் டூல் அண்ட் டை மேக்கிங், புராடக்ட் டிசைன் அண்ட் மேனுஃபாக்சரிங், ஸ்மாா்ட் மானுஃபாக்சரிங், மெகட்ரானிக்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் வழங்கப்படும் தொழில்சாா் பட்டப்படிப்பில் சோ்ந்து படிக்க மாணவா் சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
2ஆம் ஆண்டு பியூசி அல்லது பட்டயப் படிப்பில் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற தோ்வு செய்யப்படுவோருக்கு உணவு, தங்கும் விடுதி, கல்வி உதவித்தொகை, 100% வேலை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளம், 080-23500808, 91416 29584, 98802 17473 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.