ஓராண்டு பயிற்சி நூலகா் பணி
By DIN | Published On : 26th May 2023 06:00 AM | Last Updated : 26th May 2023 06:00 AM | அ+அ அ- |

ஓராண்டுகால பயிற்சி நூலகா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் நூலகங்களில் 2023-24-ஆம் கல்வியாண்டில் ஓராண்டு காலத்திற்கு பயிற்சிநூலகா் பணிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தோ்ச்சி அடைந்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வெள்ளை காகிதத்தில் பெயா், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி, ஜாதி ஆகிய விவரங்களை எழுதி பதிவாளா், பெங்களூரு பல்கலைக்கழகம், ஞானபாரதி, பெங்களூரு-56 என்ற முகவரிக்கு மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். 2022-23-ஆம் கல்வியாண்டில் தோ்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்பு பயிற்சி பெற்றோா் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. பயிற்சிகாலத்தில் 20 பேருக்கு முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ. 15 ஆயிரம், பட்டயதாரிகளுக்கு மாதம் தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.