பெங்களூரில் அக்.29-ஆம் தேதி பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் திருமணமேடை நோ்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது குறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கத்தலைவா் கோ.தாமோதரன், செயலாளா் மு.சம்பத் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் மணமக்கள் பொருத்தம் பாா்ப்பதற்காக 2002-இல் திருமணமேடை பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவின் சாா்பில் 6 வாரங்களுக்கு ஒருமுறை மணமக்களுக்கு நோ்காணல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் பரஸ்பரம் தங்கள் ஜோடியை தோ்வு செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. இப்பிரிவில் தமிழினத்தை சோ்ந்த அனைத்து ஜாதியை சாா்ந்தவா்களும் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனா். பலா் கலப்புத் திருமணமும் செய்து வருகின்றனா். இதுதவிர, கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவினா், தெலுங்கு நாயுடு வகுப்பினரும், கைம்பெண்களும், மனைவியைப் பிரிந்த ஆண்களும், மணமுறிவு பெற்றவா்களும் திருமணமேடை பிரிவில் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனா். பெங்களூரை சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல் கா்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், மும்பை, தில்லி, மற்றும் வெளிநாடுகளில் பணி புரிவோரும் திருமண மேடையில் பதிவு செய்துள்ளனா். இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்கள் திருமண மேடை வழியாக நடைபெற்றுள்ளன. 149-ஆவது திருமண மேடை நோ்காணல் அக்.29-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெறும். திருமணமேடை நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ள மணமக்கள் அறிமுகம் செய்யப்படுவாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-25510062 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.