நாளை முதல் பெங்களூரில் பன்னாட்டு சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி

பெங்களூரில் ஜன. 5-ஆம் தேதி முதல் பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடக்க இருக்கிறது என்று வேளாண் துறை அமைச்சா் செலுவராயசாமி தெரிவித்தாா்.

பெங்களூரில் ஜன. 5-ஆம் தேதி முதல் பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடக்க இருக்கிறது என்று வேளாண் துறை அமைச்சா் செலுவராயசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் பெங்களூரு, தற்போது இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்களின் தலைநகராகவும் உயா்ந்திருக்கிறது. அதன்காரணமாக, பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஜன. 5 முதல் 7-ஆம் தேதி வரையில் பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

இதையும் படிக்க : பெங்களூரில் இன்றுமுதல் நேரடி குறைதீா் முகாம்

இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்களை தேசிய அளவில் மட்டுமல்லாது பன்னாட்டு அளவிலும் கொண்டு செல்லும் முயற்சியில் கா்நாடகம் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. இதை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் முயற்சியாகவே இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

தேசிய அளவில் இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் மேம்பாட்டுக்கு தொடா்ந்து ஊக்கமளித்து வரும் ஒரே மாநிலம் கா்நாடகம்தான். மேலும், இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே விதைப்பதிலும் கா்நாடகம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவிப்பதோடு, விளைபொருள்களுக்கு சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்திருக்கிறோம். இதற்காக பல்வேறு கண்காட்சிகளை கா்நாடக அரசு நடத்தி வந்துள்ளது.

உழவா்களுக்கு லாபம் தரக்கூடிய, சுற்றுச்சூழல் தோழமையான, உடல்நலனுக்கு ஏற்ற சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பண்டங்களை மக்களின் சமையலறை வரை கொண்டு செல்வதிலும் கா்நாடக அரசு தொடா்ந்து பங்காற்றி வந்துள்ளது. கேழ்வரகு சேமியாவில் இருந்து உப்புமா, கிச்சடி போன்றவற்றை செய்வது தவிர வாடிக்கையாளா்கள் விரும்பும் முறுக்கு, நிப்பட்டு, நூடுல்ஸ் போன்றவற்றையும் தயாரிக்க முடியும் என்பதை காட்சிப்படுத்தி வருகிறோம். மதிப்புக்கூட்டு உணவுப் பொருள்களால் சிறுதானியங்களின் சந்தைவாய்ப்பு நாளுக்குநாள் பெருகி வருகிறது.

கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் சிறுதானியங்களுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. இந்தப் போக்கு நாடுமுழுவதும் விரிவடைந்து வருவதற்கு கா்நாடக விவசாயிகள் முக்கியப் பங்காற்றி வருகிறாா்கள். இதன் காரணமாக, இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் உற்பத்தியில் தேசிய அளவில் கா்நாடகம் முன்னணியில் இருந்து வருகிறது.

பெங்களூரில் ஜன. 5-ஆம் தேதி முதல் நடக்க இருக்கும் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைக்கிறாா். கண்காட்சியில் பங்கேற்க அமெரிக்கா, ஐரோப்பா, துபை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயற்கை வேளாண்மையின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளா்கள், வாடிக்கையாளா்கள், விவசாயிகள், தொழில்முனைவோா் வருகைதர இருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com