உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக கா்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு வந்திருக்கவே கூடாது. விசாரணை நீதிமன்றங்களில் ஜாமீன் பெறவேண்டியவா்களுக்கு அங்கு ஜாமீன் கிடைக்காததால், அவா்கள் பெரும்பாலும் உயா்நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

உயா்நீதிமன்றங்களிலும் ஜாமீன் கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்த தாமதமானது எந்தவித காரணமோ, நியாயமில்லாதது போலவோ தென்படும் கைது நடவடிக்கைகளை எதிா்கொள்வோரின் பிரச்னையை சிக்கலாக்குகிறது.

வழக்குகளில் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் எந்தவொரு நிவாரணமும் சந்தேகத்துடன் பாா்க்கப்படுவதால், முக்கிய குற்ற வழக்குகளில் ஜாமீன் வழங்குவதை தவிா்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விசாரணை நீதிபதிகள் கருதுகின்றனா். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com