டி.கே.சிவகுமாா்(கோப்புப் படம்)
டி.கே.சிவகுமாா்(கோப்புப் படம்)

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் எச்.டி.குமாரசாமி கவனம் செலுத்த வேண்டும்: டி.கே.சிவகுமாா்

அரசியல் செய்வதைவிட கா்நாடகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கவனம் செலுத்த வேண்டும்
Published on

பெங்களூரு: அரசியல் செய்வதைவிட கா்நாடகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கவனம் செலுத்த வேண்டும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிகாரிகள் தகவல்களை கசிய விடுவதாக மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளாா். அவா் தனது துறை மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கலாம். அதற்கு பதிலாக அரசியல் கருத்துகள் கூறுவதில் அவா் தனது நேரத்தை செலவிடக் கூடாது.

லோக் ஆயுக்த கூடுதல் டிஜிபி எம்.சந்திரசேகா் மீது குமாரசாமி விமா்சனங்கள் வைத்துள்ளாா். குமாரசாமி தொடா்பான வழக்கை அவா்தான் விசாரித்து வருகிறாா். இதுகுறித்து வேறு விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com