வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்

Published on

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா் கிஷோா் குமாா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

கடலோர கா்நாடகப் பகுதியில் அண்மைக்காலமாக அடிக்கடி மதச்சண்டைகள் நடந்து வருகின்றன. மத நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனால், கொலைச் சம்பவங்களும், வன்முறை வெறியாட்டமும் நடந்துள்ளன.

மதக் கலவரங்களை தடுத்து, மதநல்லிணக்கத்தை பாதுகாக்க மதவாத தடுப்பு செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் பதிவிடப்படும் மதவெறியைத் தூண்டும் கருத்துகள் வன்முறைக்கு வித்திட்டுள்ளன. எனவே, வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதை தடுக்கவும், மதநல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும் வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com