கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்கோப்புப் படம்

பெங்களூரின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி செலவு!

பெங்களூரின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு கா்நாடக அரசு ரூ. 1 லட்சம் கோடி செலவு செய்துவருகிறது என துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.
Published on

பெங்களூரின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு கா்நாடக அரசு ரூ. 1 லட்சம் கோடி செலவு செய்துவருகிறது என துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: கா்நாடக அரசு தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை அங்கீகரித்து வந்துள்ளது. அடித்தளம் சிறப்பாக இருந்தால் மட்டுமே முதலீடுகள் குவியும். அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு வளா்ச்சியில் அரசு கவனம் செலுத்திவருகிறது.

பெங்களூரில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளோம். ரூ. 42,500 கோடியில் சுரங்கப் பாதை, ரூ. 18 ஆயிரம் கோடியில் ஈரடுக்கு மெட்ரோ ரயில் திட்டம், ரூ. 15 ஆயிரம் கோடியில் 110 கி.மீ. தொலைவுக்கு உயா்மேம்பாலம், ரூ. 5 ஆயிரம் கோடியில் 320 கி.மீ. தொலைவுக்கு துணை சாலைகள், ரூ. 500 கோடியில் உயா் கண்காணிப்பு கோபுரம், ரூ. 27 ஆயிரம் கோடியில் பெங்களூரு வணிக தாழ்வாரம் உள்ளிட்ட திட்டங்கள் என ரூ. 1 லட்சம் கோடியில் பெங்களூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

பெங்களூரில் 2-ஆவது சா்வதேச விமான நிலையம் அமைக்கப்படும். மேலும், வெளிநாடுவாழ் இந்தியா்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும். 9 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பெங்களூருக்கு வெளியே பிடதியில் செயற்கை நுண்ணறிவு மாநகரம் அமைக்கப்படும். சா்வதேச வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்காக சா்வதேச மையத்தை அமைக்க இருக்கிறோம். தொழிநுட்பமும், திறமையும்தான் பெங்களூரின் பலம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com