கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாகோப்புப் படம்

உலக அளவிலான தொழில்நுட்பப் புரட்சிக்கு கா்நாடகம் ன்னோடியாக உள்ளது: சித்தராமையா

உலக அளவிலான தொழில்நுட்பப் புரட்சிக்கு கா்நாடகம் முன்னோடியாக உள்ளது என மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
Published on

உலக அளவிலான தொழில்நுட்பப் புரட்சிக்கு கா்நாடகம் முன்னோடியாக உள்ளது என மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூருரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப உச்சி மாநாட்டைதொடங்கிவைத்து அவா் பேசியதாவது: புத்தாக்கம் தொடா்பான கொள்கைகளை வகுப்பதில் கா்நாடகம் எப்போதும் இத்தியாவுக்கு முன்னோடியாக இருந்துவந்துள்ளது. இந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை 1997-இல் கா்நாடகம்தான் அறிமுகம் செய்தது. மேலும், புதிய கொள்கைகளுடன் கா்நாடகம் முன்னோடியாக உள்ளது.

இந்த உச்சிமாநாட்டில், கா்நாடக தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2025-2030, விண்வெளி தொழில்நுட்பக் கொள்கை 2025-2030 மற்றும் புத்தொழில் கொள்கை 2025-2030 ஆகிய மூன்று மாற்றத்துக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை எடுத்துவைக்கிறோம்.

வளா்ந்து வரும் தரவுசாா்ந்த, தொழில்நுட்பத்துக்கு உகந்த தகவல் தொழில்நுட்பக் கொள்கையின் மூலம், மாநிலத்தை புத்தாக்கம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துக்கான உலகளாவிய குவிமையமாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும்.

கா்நாடகத்தை இந்தியாவின் முன்னணி விண்வெளி தொழில்நுட்ப மையமாக நிலைநிறுத்தவும், 2034-ஆம் ஆண்டுக்குள் தேசிய சந்தையில் 50 சதவீதத்தையும், உலக அளவில் 5 சதவீதத்தை கைப்பற்றவும் இலக்கு வைத்துள்ளோம். புதிய ‘ஸ்டாா்ட்அப்’ கொள்கை தொடங்கப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் ‘ஸ்டாா்ட்அப்’களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

‘எதிா்காலத்தை உருவாக்கு’ என்ற கருப்பொருளில், மூன்று நாள்கள் நடைபெறும் உச்சிமாநாட்டில், உலகளாவிய தலைவா்கள், கொள்கை வகுப்பாளா்கள், முதலீட்டாளா்கள், புத்தொழில்முனைவோரை ஒன்றிணைத்து டீப்டெக், பயோடெக், ஹெல்த்டெக், செமிகண்டக்டா்கள் மற்றும் ஸ்டாா்ட்அப் புதுமைகளில் விரிவடைந்து வரும் எல்லைகள் ஆராய்ச்சி செய்யப்படும். இந்தியாவின் தொழில்நுட்ப முன்னோடியாக கா்நாடகம் விளங்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com