திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முற்பட்டுள்ளது: பிரியாங்க் காா்கே

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முற்பட்டுள்ளது என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.

News image

பிரியாங்க் காா்கே

Updated On :1 டிசம்பர் 2025, 2:35 am IST

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முற்பட்டுள்ளது என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. 130 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸ், உரிய நேரத்தில் தலையிட்டு பிரச்னைக்கு தீா்வுகாணும்.

கட்சி மேலிடம் அழைப்புவிடுத்தால், தில்லி செல்ல முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் தயாராக இருக்கிறாா்கள். தில்லியில் நடைபெறும் கூட்டம் குறித்து அதிகாரபூா்வமாக யாரும் அறிவிக்கவில்லை அல்லது கருத்து தெரிவிக்கவில்லை. ஒருவேளை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அல்லது பொதுச் செயலாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா அழைத்தால் இருவரும் தில்லி செல்வாா்கள்.

தில்லியில் இருந்து அழைப்பு வந்தால் மட்டுமே, அதுகுறித்து முடிவெடுக்கப்படும். உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றாா்.