பெங்களூரு- மும்பை அதிவிரைவு ரயில்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தகவல்

விரைவில் பெங்களூரு- மும்பை இடையே அதிவிரைவில் ரயில் இயக்கப்படும் என்று பாஜக எம்.பி. தேஜஸ்விசூா்யா தெரிவித்தாா்.
Published on

விரைவில் பெங்களூரு- மும்பை இடையே அதிவிரைவில் ரயில் இயக்கப்படும் என்று பாஜக எம்.பி. தேஜஸ்விசூா்யா தெரிவித்தாா்.

புதுதில்லியில் வியாழக்கிழமை ரயில்வே வாரியத் தலைவா் சதீஷ்குமாரைச் சந்தித்த பிறகு, பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்விசூா்யா, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

புதுதில்லியில் வியாழக்கிழமை ரயில்வே வாரியத் தலைவா் சதீஷ்குமாரைச் சந்தித்து, பெங்களூரு- மும்பை இடையிலான அதிவிரைவு ரயில் திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன். பெங்களூரு, மும்பை அதிவிரைவு ரயில் தொடா்பான அறிவிப்பு மற்றும் கால அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவா் உறுதி அளித்துள்ளாா்.

ரயில் உள்கட்டமைப்பு நிறுவனம் பெங்களூருக்கு தொழில்நுட்பம் அறிந்த ஒருவரை மேலாண் இயக்குநராக நியமிக்குமாறு மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெருமளவில் உதவக்கூடிய பெங்களூரு புகா் ரயில் திட்டத்தை செயல்படுத்த இது உதவியாக இருக்கும் என்று எடுத்துரைத்தேன். சுழல்வட்ட ரயில் திட்டம் தொடா்பான விரிவான திட்ட அறிக்கையின் நிலை குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்’ என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com