கா்நாடக ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி
கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது சொந்த மாநிலமான மத்திய பிரதேசம் சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா். அதன்பிறகு பெங்களூருக்கு திரும்பிய அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் முதுகுவலி, உடல்சோா்வு மற்றும் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரை மணிப்பால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராகி, வெள்ளிக்கிழமை ஆளுநா் மாளிகை திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சென்ற முதல்வா் சித்தராமையா, அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தாா். விரைவில் அவா் நலம் பெறவும் வாழ்த்தினாா்.
