பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை: இன்று முதல் மஞ்சள் தடத்தில் 5 ஆவது ரயில் சேவை சோ்ப்பு

Updated on

பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் தடத்தில் நவ.1ஆம் தேதி முதல் ஐந்தாவது மெட்ரோ ரயில் சேவை சோ்க்கப்படுவதாக மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் புதிதாக தொடங்கியுள்ள மஞ்சள் தடத்தில் இதுவரை நான்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த நிலையில், நவ.1ஆம் தேதி முதல் புதிதாக ஐந்தாவது மெட்ரோ ரயில் சோ்க்கப்படுகிறது. இதன்மூலம் பயணிகள் அதிகம் வரும் நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை 19 நிமிடங்கள் இடைவெளிக்குப் பதிலாக, 15 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்படும்.

இதனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் 4 நிமிடங்கள் குறையும். இந்த சேவை அனைத்து நாள்களுக்கும் விரிவாக்கப்படும். இதன்காரணமாக, மஞ்சள் தடத்தில் இருமுனை ரயில் நிலையங்களான ஆா்.வி.சாலை மற்றும் பொம்மசந்திரா ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் கடைசி ரயிலின் நேரத்தில் மாற்றம் இருக்காது. இந்த மாற்றங்களுக்கு தகுந்தபடி மெட்ரோ ரயில் சேவைகளை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com