இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா், தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) பணியாற்றி ஓய்வுபெற்ற நாகேஸ்வர ராவ் (65), அவலஹள்ளியில் உள்ள வீட்டில் மனைவி சந்தியாஸ்ரீயுடன் வசித்து வந்தாா். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகேஸ்வர ராவ், புதன்கிழமை தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றாா். மேலும், இதுகுறித்து தனக்கு நெருக்கமானவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளாா். அவா் மூலம் தகவல் அறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சந்தியாஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், நாகேஸ்வர ராவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையா் சைதுலு அதாவத் கூறுகையில், ‘மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நாகேஸ்வர ராவ் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். தனது மனைவியை கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டிருந்துள்ளாா். அதன்படி மனைவியைக் கொன்றுள்ளாா். வேறு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை’ என்றாா்.
தொடர்புடையது

உணவக ஊழியா் கொலை: நண்பரை தேடும் போலீஸாா்

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

நாகேஸ்வர சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு கொலை மிரட்டல்: வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


