உத்தரமேரூரில் யுகாதி விழா

உத்தரமேரூர், ஏப். 4: உத்தரமேரூர் வட்டார நாயுடுகள் நலச் சங்கத்தின் சார்பில் யுகாதி விழா சனிக்கிழமை நடைபெற்றது. ÷இதற்கு சங்கத் தலைவர் பி.கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  நீரடி கே. வெங்கடேசன், காக்கநல

உத்தரமேரூர், ஏப். 4: உத்தரமேரூர் வட்டார நாயுடுகள் நலச் சங்கத்தின் சார்பில் யுகாதி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

÷இதற்கு சங்கத் தலைவர் பி.கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  நீரடி கே. வெங்கடேசன், காக்கநல்லூர் டி.கே. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டாரச் செயலர் இரா. பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

÷விழா நிகழ்ச்சிகளை இரா. கோபி தொகுத்து வழங்கினார்.  சுகுணா சம்பத், வனஜா கோபி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

÷சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற  காஞ்சி பல்லவன் பொறியியல் கல்லூரிகள் குழும நிறுவனர் கே.ஆர். சீதாபதி , விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.

÷ஐ.என்.டி.யூ.சி. தலைவர் இராம. நீராளன், மாவட்ட பொதுச்செயலர் எஸ். சத்தியநாராயணன், துணைப் பொதுச்செயலர் வி. சீனுவாசன், பொருளாளர் ஜே. மனோகரன், இளைஞர் அணித் தலைவர் கே.பி. சிவகுமார், செயலர் ஆர். கமலேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

÷முன்னதாக, சென்னை பெருங்குடி லைப் லைன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கே.டி.எஸ். ராமனின் மாயாஜால நிகழ்ச்சி நடைபெற்றது.

÷ இதையொட்டி, உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து பேரணி தொடங்கியது. இதற்கு நாயுடுகள் நலச் சங்க மாநில அமைப்புச் செயலர் காஞ்சி காடக. முத்தரையன் நாயுடு தலைமை வகித்தார். ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணியினர் பங்கேற்ற இப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக விழா நடைபெறும் திருமண மண்டபத்தை சென்றடைந்தது. விழா ஏற்பாடுகளை விஎஸ். திவாகர், கப்பல் வெங்கடேசன், காக்கநல்லூர் வெங்கடேசன், லட்சுமணமூர்த்தி, சிட்டிபாபு, கமலநாதன், பாஸ்கர், ஜே. சந்தானம், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர்கள் செய்திருந்தனர். ÷பாபு சுதந்திரநாத் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com