அழிவின் விளம்பில் "கற்பகத்தரு'

காஞ்சிபுரம், ஜூலை 10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கற்பகத்தரு என்று கிராம மக்களால் அழைக்கப்பட்ட பனைமரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ÷புதிதாக பனைமரங்களை வைத்து வளர்ப்பதிலும், தானாக வளரும்

காஞ்சிபுரம், ஜூலை 10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கற்பகத்தரு என்று கிராம மக்களால் அழைக்கப்பட்ட பனைமரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ÷புதிதாக பனைமரங்களை வைத்து வளர்ப்பதிலும், தானாக வளரும் பனைமரங்களை பாதுகாப்பதிலும் தற்போது விவசாயிகளும் ஆர்வம் காட்டுவதில்லை.

÷கடந்த காலங்களில் பனைமரத்தின் அனைத்து பாகங்களும் கிராமத்தில் பயன்படுவதாக இருந்தது. இதனால் இதை "கற்பகத்தரு' என்று கிராம மக்கள் அழைப்பர்.

÷இந்த மரங்களின் ஓலைகள் கூரை வீடுகளின் மேற்கூரைகளாக பயன்பட்டன. மரங்கள் வீடு கட்ட பயன்பட்டன.

÷பனைமரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர் நல்ல குளிர்பானம். தற்போது கிராமங்களில் புதிதாக வீடு கட்டுவோர் பெரும்பாலானோர் கூரை வீடுகளே கட்டுவது கிடையாது.

÷கடந்த அரசால் கல் வீடுகளும், தற்போதைய அரசால் பசுமை வீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.÷இதனால் வரும் காலத்தில் கூரைவீடுகளே இல்லாமல் போகும் சூழ்நிலைகளும் உருவாகலாம்.÷தற்போது கூரைவீட்டுக்கு தேவையான பனைமரத்தின் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது.

÷பதநீர் இறக்கும் தொழிலும் சொல்லும்படி இல்லை. சிலர் பதநீர் என்ற பெயரில், பானைகளில் சுண்ணாம்பு தடவாமல் இறக்கிக் கள்ளாக பயன்படுத்தும் சம்பவங்கள் சில இடங்களில் நடைபெறும்.

÷இதனால் போலீஸôரின் கெடுபிடி அதிகமானதால் பதநீர் இறக்குபவர்களும் கூட அத்  தொழிலை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.÷தற்போது பனங்காய், நுங்கு போன்றவற்றுக்கு மட்டுமே பனைமரங்கள் பயன்பட்டு வருகின்றன.

÷இதனால் தற்போது பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமோ, அதை  வைத்து வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையோ அறுகிவிட்டது.

÷குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டுமனைகள், தொழிற்சாலைகள் போன்றவை அமைக்கும்போது ஆயிரக்கணக்கில் பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன.

÷ஆனால் புதிதாக யாரும் பனைமரங்களை வளர்ப்பதில்லை. வயல்வெளிகளில் தானாக வளர்ந்தாலும் அதை விவசாயிகள் பாதுகாக்காமல் அப்புறப்படுத்தி விடுகின்றனர்.

÷இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டபோது "பனைமரங்களில் இருந்து பனங்கற்கண்டுகள் தயாரிக்கலாம்.

÷பனைவெல்லம் உடலுக்கு நல்லது. பனைமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பதநீர் நல்ல குளிர்பானம். இதனுடன் சில பொருள்களை கலந்து கெடாமல் பாட்டிலில் அடைத்து வைத்து குளிர்பானம்போல் விற்பனை செய்ய முடியும்.

÷ஆனால் இவை குறித்து விவசாயிகளுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். பனையின் பயன்பாடு அதிகரிக்கும்போது அதை தானாகவே விவசாயிகள் பாதுகாக்கத் தொடங்குவர்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com